logo
home சினிமா டிசம்பர் 16, 2022
பெண் புரோக்கராக மாறிய பயில்வான் ரங்கநாதன்!?... விளாசும் சினிமாத்துறையினர்
article image

நிறம்

சிரிப்பு வில்லனாக வலம் வந்த பயில்வான் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குறைந்தவுடன், அவர் எடுத்த புதிய அவதாரம்தான்  யூடியூபர். ஆனால் சினிமா வட்டாரத்தில் இவரை பெண் புரோக்கர் என்றே அழைக்கின்றனர்.

வாய்ப்பு இல்லாததால், வருமானத்திற்கு எந்த தொழில் செய்யலாம் என்று யோசித்த பயில்வான் ரங்கநாதனுக்கு கை கொடுத்தது  youtube சேனல். 

புதியதாக ஒரு சேனலை உருவாக்கினார், அந்த சேனலில் சினிமாத்துறையினரைப் பற்றி ஒவ்வொரு விமர்சனத்தையும் வைத்து, தனது சப்ஸ்கிரைப்பை அதிகரித்து வந்தவருக்கு, பெண் நடிகைகளைப் பற்றியும், அவர்களது அந்தரங்கங்கள் பற்றியும் விமர்சனம் வைக்கும்போதெல்லாம், அதிகப்படியான views கிடைத்ததால், அதையே வாடிக்கையாக்கிக் கொண்டு, தொடர்ந்து சக நடிகைகளைப் பற்றியும், அவர்களின் அந்தரங்கங்களைப் பற்றியும் விலாவாரியாக, காமக்கதைகள் படிப்பதைப் போன்று தனது சேனலில் அந்த நடிகைகளைப் பற்றி விமர்சித்துவருகிறார்.

இவரின் இந்த செயலுக்கு சினிமாவில் உள்ள பலரும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

நடிகராக இருந்ததைவிட தனது youtube சேனலில் செக்ஸ் விமர்சகராக மாறியபின்னர் அதிகமாக பிரபலமாகிவருகிறார். குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி தனது யூடியூப் சேனலில் அவர் பேசும் நடை, செக்ஸ் கதை சொல்வதைப்போன்றே இருப்பதால், பல்வேறு இளைஞர்கள் இவரின் செக்ஸ் விமர்சனத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

புதிய நடிகைகள், பழைய நடிகைகள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து நடிகைகளின் அந்தரங்கத்தையும் அறிந்தவர் போன்று இவர் பேசுவதால் இவர் மீது பலருக்கு சந்தேகமும் நிலவுவதாக கூறப்படுகிறது.

இவர் பெண் புரோக்கராக இருக்கவேண்டும் அல்லது அந்தப் பெண்களுடன் அந்தரங்க உறவு வைத்தவராக இருக்கவேண்டும், அப்படி இருந்தால்தான் அவர்களைப் பற்றி இவரால் கூற முடியும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

சினிமாத்துறையினரின் இந்த விமர்சனத்தை மெய்ப்பிக்கும் வகையில்...

பயில்வான் ரங்கநாதனின் ஆபாச வார்த்தையால் பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர், வாக்கிங் செல்லும்போது, பயில்வானை பார்த்து, அசிங்கமாக திட்டியும், செருப்பால் அடித்தும் உள்ளார். 

அந்த நடிகையை சமாதானப்படுத்தியவர்களிடம், 

“பயில்வான் ரங்கநாதன் மிகப் பெரிய செக்ஸ்பேய்... பெண்களைப்பார்த்தால் வாயில் ஜொல் வழிஞ்சுடும்... இவனுக்கு அடங்கிப்போகாத நடிகைகளை, ஆபாசமாக தனது  youtube சேனலில் விமர்சனம் வைப்பான்” என்று பொது வெளியில் கூறியுள்ளார்.

மேலும் வெளியில் எழுத முடியாத வார்த்தைளில் பயில்வானை விமர்சனம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதைப்போன்று ராதிகா சரத்குமார் குறித்து  பேசி வம்பில் மாட்டிக்கொண்டார் பயில்வான் ரங்கநாதன். திருவான்மியூர் பீச்சில் தற்செயலாக பயில்வானை சந்தித்த ராதிகா அவரை அந்த இடத்திலேயே வைத்து வாக்குவாதம் செய்து கிழித்து தொங்கவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அண்மையில் பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை போனில் அழைத்து கிழித்து தொங்கவிட்ட ஆடியோ இணையத்தில் மிகப் பெரிய அளவில் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் பயில்வான்...

மீனாவின் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் இறப்பிற்கு மீனாதான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

மேலும் அதில் சரத்குமார் மீனாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், மீனா திரும்பவும் நடிக்க சென்றதும், மீனா தனது மகளை நடிக்க வைத்தது போன்ற நிகழ்வால் மிகுந்த மன உளைச்சலில் மீனாவின் கணவர் இருந்ததாகவும், இதுவே அவர் இறப்பிற்கு காரணம் என்றும் பயில்வான் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார்.

மீனா குறித்த இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து வெளிப்படையாக எதிர்ப்புக் குரல் வந்தாலும், தயாரிப்பாளர் கே.ராஜன் செய்த சம்பவம் தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது.

பயில்வான் ரங்கநாதன் ஒரு பெண் புரோக்கர் என்று திட்டவட்டமாக பொது நிகழ்ச்சியில்,  மைக்கில் கூறினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

சினிமா சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளும் தயாரிப்பாளர் கே. ராஜன். சினிமாத் துறையில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். 'கட்சிக்காரன்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட பயில்வான் ரங்கநாதன் தன்னை தகாத வார்த்தையால் ராஜன் பேசியதாக கூறினார்.

பயில்வான் ரங்கநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிந்த தயாரிப்பாளர் கே.ராஜன், மீனா கணவரின் இறப்பு குறித்து பயில்வான் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டனர்.

உடனே ராஜன், ‘உங்களுக்கு பதில் சொல்ல நான் இங்கு வரவில்லை. உனக்கு பதில் சொல்ற இடம் இது இல்ல. வா தனியா பேட்டி வச்சுக்கலாம். ரெண்டு பேரும் பேட்டி வச்சுக்கலாம். அங்க வாங்க. இந்த மேடை தயாரிப்பாளர் போட்ட மேடை. எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையப் பத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்திட்டு இருக்க. நீ ஒரு பெண் புரோக்கர்.

ஒவ்வொரு நடிகைகள கேவலப்படுத்திட்டு இருக்க. பெட்ரூம் பத்தியே பேசுற. இந்த மிரட்டல் எல்லாம் வேற ஆளுக்கிட்ட வச்சுக்க’ என்று கூறினார். இதனால் கே. ராஜனுக்கும், பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியாக அங்கிருந்தவர்கள் ரங்கநாதனை சமாதனப்படுத்தி வெளியில் அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சி மேடையிலே கே. ராஜனும், பயில்வானும் மோதிக்கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

கே.ராஜன் மட்டுமல்ல, பல்வேறு சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்கள் பயில்வானை பெண் புரோக்கர் என்றே சொல்வதால் பொது மக்கள் மத்தியிலும் பயில்வான் குறித்து சந்தேகம் நிலவுகிறது.