logo
home சினிமா ஏப்ரல் 18, 2021
ஆளுங்கட்சிக்கு எதிரான படமாக வெளிவருமா ‘கோஷ்டி’ திரைப்படம்? டிரெய்லர் போஸ்டரால் சர்ச்சை
article image

நிறம்

தமிழ் திரையுலகில் தற்போது அரசியலை மையப்படுத்தி காமெடி படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது  முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ஹாரர் காமடி படமாக தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது ‘கோஷ்டி’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட் ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கோஷ்டி’.

இதில் முன்னணி நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் மூத்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் மேனன், லிவிங்ஸ்டன், மனோபாலா, நடிகர்கள் ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சத்யன், நடிகை ஊர்வசி உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். 

தற்போது தமிழ் திரையுலகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதராக ஒரு பிரிவினரும், எதிராக இன்னொரு பிரிவினரும் உள்ளனர். வருமானவரி, ரெய்டு, பணமதிப்பிழப்பு, என்ஜிஓக்கள் தடை போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நடிகப் பட்டாளத்தில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் நேரிடையாக மத்திய அரசு பற்றி வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்றோரை நேரிடையாகவே, சமூகவலைதளங்களில் வம்பிழுத்து, எதிர்ப்பு வருமபோது, தெரியாமல் பதிவிட்டுவிட்டதாக மன்னிப்பு கோருவது தமிழ் சினிமாக உலகில் வாடிக்கையாக மாறிவிட்டது.

மறைந்த தமிழக முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா, கலைஞர் மு. கருணாநிதி போன்றோர் முதல்வர்களாக இருந்த சமயத்தில், தமிழக சினிமாக்களில் அரசியல் கலப்பு என்பது சிறிது கூட இருக்காது. ஆனால் தற்போது அரசு எதிர்ப்பு நிலை அளவுக்கதிகமாக இருப்பதாக ரசிகர்களே கூறுகின்றனர்.

அதன்வரிசையில் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘கோஷ்டி’ பட டிரெய்லர் முழுவதும் அதிமுகவை கோலிசெய்வது போன்று அமைந்துள்ளதால்.

இந்தப் படம் நிச்சயம் அதிமுகவை கலாய்த்து எடுக்கப்பட்ட மசாலா படமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பொலிசாகவும், பேயாகவும் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் பேய்களையும், ஆவிகளையும் வைத்து எடுக்கும் படங்கள் மிகுந்த வரவேற்பு பெறுவதால்,   ‘கோஷ்டி’ படம் மிகுந்த வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் போஸ்டர், அதிமுகவை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக ரசிகர்மத்தியில் விவாதிக்கப்படுகிறது.

அதன்படி, ‘கோஷ்டி: படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அமைச்சராக பதவி ஏற்கும் அரசியல்வாதிகளின் குழு புகைப்படம் போல் அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லைக்குகளும், கமெண்டுகளும் கிடைத்து வருகிறது.