ஹீரோவாக நடிப்பதைகாட்டிலும் வில்லன் ரோலுக்கு தற்போது சரியான ஆளாக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழில் பிரபல நடிகர்களுக்கு எதிராக வில்லன் ரோலில் நடித்த அனுபவத்தாலும், வில்லன் ரோலில் ஹீரோவைவிட சிறப்பாக நடிப்பதால், விஜய்சேதுபதிக்கு அதிகப்படியான வில்லன் ரோலில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது.
வில்லன் படத்தில் கமலுக்கு எதிராக வில்லன் ரோலில் நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். அந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிடிப்பை துவக்க ஆயத்தமாகியுள்ளனர்.
கமலஹாசனின் சினிமாவை பார்த்து வளர்ந்த லோகேஷ் கனகராஜ் தற்போது அவரையே இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இதனால் கமல் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு லோகேஷ் கனகராஜுக்கு கமல் நடிப்பில் ரொம்ப பிடித்த படமான விக்ரம் படத்தின் தலைப்பை வைத்து விட்டனர்.
முன்னதாக விக்ரம் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தது. ஆனால் அது வெறும் புரளியாக முடிவுற்றது.
அடுத்ததாக தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் செய்திகள் கிடைத்தது.
கமலஹாசன் அரசியலில் நுழைந்துள்ளதால் கண்டிப்பாக சொன்ன தேதியில் விக்ரம் படம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதாலும், இந்த படத்திற்காக, தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்றகாரணத்தால் ராகவா லாரன்ஸ் நைசாக ஒதுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் அடுத்த வில்லனை தேடி அலைந்தபோதுதான், நடிகர் விஜய்சேதுபதியின் பக்கம் பார்வை திரும்பியுள்ளது.
தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் விஜய்சேதுபதி, அந்த பொன்னான வாய்ப்பை, லட்டு மாதிரி அள்ளித்தூக்கி விட்டாராம். ஏற்கனவே ரஜினி மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயந்துள்ள விஜய்சேதுபதிக்கு இந்த படத்தில் 1.5 கோடி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கமல்ஹாசனையும் பயன்படுத்தி தன்னுடைய சம்பளத்தையும் மார்க்கெட்டையும் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து விட்டாராம் விஜய் சேதுபதி. இதனால் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் வில்லனாக நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே இரட்டிப்பாகி உள்ளது.