logo
home சினிமா ஏப்ரல் 22, 2021
“படைத்தலைவி” மூலம் ஜெயலலிதா ஆத்மா கூறுவது என்ன? இயக்குநர் நவீனின் அற்புத படைப்பு..
article image

நிறம்

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட படங்கள் சமீபத்தில் திரைத்துறையில் அதிகப்படியான விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஜெயலலிதாவின் மரணத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ளது “படைத்தலைவி” என்ற குறும்படம்.

 மறைந்த முன்னால் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான ஜெயலலிதா இறப்பில் பல்வேறு மர்மங்கள் இருந்தாலும், இதுவரை சரியான காரணம் கண்டுபிடிக்கவில்லை, விசாரணை கமிஷன் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும் இந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படைத்தலைவி மிக அற்புதமான குறும்படமாக ரசனைக்குரிய படமாகவும் திகழ்கிறது.

திரைக்கதை, வசனம், இயக்கம், அர்ஜூன் நவின் என்ற அறிமுக இயக்குநர், அறிமுகத்திலேயே மிக பிரம்மாண்டமாக வெளியிட்டு அசத்தியுள்ளார்.

ஏதோ பேய் படம் பார்ப்பதைப் போன்று ஆரம்பத்தில் மிக த்ரில்லிங்காக படத்தின் நகர்வு அமைந்துள்ளது, சுவாரஸ்யத்திற்கேற்ப இசையும் மிரட்டும் தொனியில் உள்ளது. அடுத்து என்ன நடைபெறும் என்பதை முன்கூட்டியே கணிக்கமுடியாதபடி படத்தின் காட்சி அமைந்துள்ளது.

இதுபோன்ற ஒரு சஸ்பென்ஸ், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது.

இயக்குனரின் நேரடி அனுபவத்தை மையமாக வைத்து கதை அமைத்து, கடைசியில் ஜெயலலிதாவின் தோழி, ஜெ.சமாதி, ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினரின் அறிக்கை என்று த்ரில்லிங் படத்தில் அரசியலையும் நுழைத்துள்ளார்.

இக்குறும்படத்தை நடிகர் ஆனந்ராஜ், சத்யராஜ், மன்சூர்அலிகான் போன்ற பிரபல நடிகர்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

சாதாரணமாக குறும்படம் என்றால் சாதாரண வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை கூறுவதாகத்தான் அனைவரும் எடுப்பர். ஆனால் நவீன் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்தக் குறும்படத்தின் வெற்றிக்கு பரிசாக “வேலன்” என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தப் படம் தற்போது Youtube சேனலில் வெளியிடப்பட்டுள்ளதால் அவசியம் குறும்படத் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வித்தியாசமான படத்தை பார்க்க விரும்பும் அனைவரும் இப்படத்தை பார்க்கலாம்.

படத்தின் முடிவில் ஜெயலலிதா ஆவி என்ன கூறியது, ஆத்மா சாந்தியடைந்ததா என்பத இந்தப் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் இந்தக் குறும்படத்தை பார்த்த அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் இயக்குநர் நவீன் அவர்களுக்கு வாழ்த்து கூறியிருப்பதிலிருந்து இந்த படத்தின் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.