logo
home சினிமா ஏப்ரல் 13, 2021
குட்டி டிரெஸ் போட்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கௌசல்யா
article image

நிறம்

நடிகை கௌசல்யாவை இதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது குட்டி உடையில் சூப்பர் குட்டியாக போஸ் கொடுத்து ரசிகர்கள் வாயில் ஜொல்விட வைத்துள்ளார் கௌசல்யா.

தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்த கௌசல்யா. பெங்களூரை சேர்ந்த இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் சினிமாவிற்கு வந்தார். தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன. 

தமிழ் படங்கள் பலவற்றில் ஹீரோயினியாக நடித்த நடிகை, விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தவரைக் கூட்டி வந்து அதே விஜய்யின் வாயால் அக்கா என்று அழைக்க வைத்தார்கள் திருமலை படத்தில்.

 அந்தப் படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக்கப்பட்டார் கவுசல்யா. பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. 

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சில படங்களில் நடித்து வேகமாக முன்னுக்குவந்து அதே வேகத்தில் காணாமல் போனவர். தமிழ் கைவிட்டாலும் மலையாளத்தில் தாய் மொழியான கன்னடத்திலும் சில வாய்ப்புக்கள் வந்தன. ஆனால்,நினைத்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. 

பட வாய்ப்பு இன்றி சினித்துறையில் சற்று ஒதுங்கி இருந்தார், சரியான உடற் பயிற்சி இன்மை, பழமையான உடை என்று இருந்தவர் தற்போது சினிமா வாய்ப்பை மீண்டும் பெறுவதற்காக, மெனக்கெட்டு பல்வேறு உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று கடைபிடித்து, சுண்டிஇழுக்கும் கொளசல்யாவாக மாறியுள்ளார். எப்படியாவது தமிழில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும்என்று வெறி கொண்டு அலைகிறார். 

சமீபத்தில் தனது உடலையும், குறைந்த உடையும் தெரியும் வண்ணம் பல்வேறு போட்டோஷூட் நடத்தி, அந்தப் போட்டோக்களை தயாரிப்பாளர்கள் மத்தியிலும், முன்னணி ஹீரோக்கள் மத்தியிலும்  பரவவிட்டிருக்கிறார்.

முழுசாக போத்தி நடித்த நடிகை தற்போது அரைகுறை ஆடையுடனும் நடிக்க தயார் என்பதுபோல கட்டுக்குலையாத உடல் அழகை காட்டி திரையுலகத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம் வயதில் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதனை பார்த்த ரசிகர்கள், கௌசல்யா-வா இது..? என்று புருவத்தை உயர்த்தி வருகின்றனர்.