தோனி கிரிக்கெட்டில் புரியாத சாதனைகள் இல்லை. தற்போது ஐபிஎல்லும் அவரது திறமைக்கு நிகர் இல்லை. போட்டியின் கடைசி கட்டத்தில் இறங்கி சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வதில் இவருக்கு நிகர் வேறொருவர் இல்லை. தலைசிறந்த பினிஷர் என்றே அழைக்கப்படுகிறார்.
இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக சென்னை என்றாலே அவருக்கு தனி பிரியம் தான் ஒரு பந்தமும் உண்டு. அதேபோல தமிழ் மொழியை நேசிக்கும் மில்லியன் கணக்கான மக்களில் இவரும் ஒருவர். அதனால் தான் என்னமோ தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறார்?
ஆம், எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் என்பவர் இத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தோனி தயாரிக்கும் முதல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தோனியின் தயாரிப்பில் புதிய திரைப்பட வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.