நிறம்
மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த அவரது இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும், என்று அவரின் மனைவி தமிழக முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று வரும் மே மாதம் முதல் பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.