டி. ராஜேந்தர் தமிழ் சினிமாவில் 1980 களின் போது, இயக்குனர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்துமே தனி ஒருவராய் சாதித்து காட்டியவர் அவரது அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர்களாக இருந்தன, பல ஆண்டுகளாக ஓடின, மற்றும் பாடல்களும் நன்கு பாராட்டப்பட்டன. அவர் தனது திரைப்படங்களில் புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்றவர், இவரின் வசனங்கள் அடுக்கு மொழியாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். அதற்கென தனி ரசிகர் கூட்டம் பெற்றிருந்தார்.
இவர் சமீபத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்ததாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருப்பினும், மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் பூரண நலம் பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கோலிவுட்டிலும், ரசிகர்களும் வேண்டிக் கொள்கின்றனர்.