logo
home சினிமா ஏப்ரல் 20, 2021
உடல் ஊனம் தடையல்ல இயக்குனராக சாதிக்கும் ஹரிகணேஷ்
article image

நிறம்

சினிமா துறை என்பது பலரது கனவாக இருந்தாலும், இதில் சாதிப்பது ஒருசிலர்தான், மனம் இருந்தால் கண்டிப்பாக எந்தத் துறையானாலும் சாதித்துவிடலாம். அந்த வகையில் திரைத்துறையில் உயிர்நாடியாக இருக்கும் இயக்குநர் துறையில் சாதித்திருக்கிறார் உடல் குறைபாடுள்ள ஒரு நபர். நமது thiraimalar.com இணையதளத்தில் அவரைப்பற்றி விரிவாக எடுத்துறைக்க முயற்சிக்கிறோம்.

கண்டிப்பாக இவர் அனைத்து துறை சாதனையாளர்களுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகவும், ரோல்மாடலாகவுமே எடுத்துக் கொள்ளலாம். 

“இந்த உலகத்திலே எல்லோருக்குமே ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழணும். உடம் பிலே குறை இருக்கிறதால நம்ம திறமைய ஒழிச்சி வைக்க முடியுமா என்ன? சினிமா. பெரிய கடல்னு தெரிந்துதான் குதித்திருக்கிறேன்” என வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கை குறையாமல் பேசுகிறார் ஹரிகணேஷ். அவரைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் வெ.கல்லுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது இளம் பிள்ளைவாத நோயால் நடக்க முடியாமல் போனவர். சினிமா வில் இயக்குநர் ஆக வேண்டும் என திண்டுக்கல்லில் இருந்து நம்பிக்கை நடைபோட்டு சென்னைக்கு வந்தவர். பத்து வருட சினிமா முயற்சியில் 'ஜமுனா' என்னும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. படத்தின் ஒரு பகுதியைப் படமாக்கிவிட்டு மறு பகுதியைப் படமாக்க காத் திருக்கும் ஹரிகணேஷிடம் பேசினோம்.

குருவிக்கூட்டில் வாழுகிற அழகான குடும்பம் மாதிரி என் குடும்பம். எதையாவது சாதிச் சிட்டு வா என்கிற மனைவி உமேதரா. 

பிடிச்சதை செய் என்று சொல்கிற அப்பா பரமசிவம். 

இவர்கள் இருவரும்தான் என்னை தாங்கிப் பிடிக்கிறார்கள். என் வாழ்க்கைக்கு அர்த் தம் கொடுத்திருக்கும் என் குழந் தைகள் ரேஷ்மா, பிரவீன், என் அம்மா கீதா இறந்தவிட்டார். அப்போ திருந்து என்னை கவனித்து வருகிறார் என் அப்பா. என் அப்பாவையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழலில் வாழ்ந்துவருகிறேன். எப்போதும் எனக்கு உதவியாக இருக்கும் என் உடன் பிறவா தம்பிகள் மதன் கோபால், உதயா. பிரவீன். இவர்களால் தான் என் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நான் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போது இளம் பிள்ளைவாத நோய் ஏற்பட்டு என்னால் நடக்கமுடியாமல் போனது. திரும்பவும் இருபத்திரண்டு வயதில் 'போஸ்ட் போலியோ சின்ட்ரம்' தாக்கி சுத்தமாக நடக்க முடியவில்லை. தரையில் தவழ்ந்து கொண்டுதான் போக முடியும். நாளுக்கு நாள் என் உடல் முடங்கிக் கொண்டு போவது எனக்குத் தெரிகிறது. கால்களால் எப்படி நடப்பது என்று எனக்குத் தெரியாது. நான் வாங்கி வந்த வரம் அப்படி. வயிற்றுப் பிழைப்புக்காக பிளாட்பாரத்தில் பொம்மைகள் விற்றிருக்கிறேன். சிறுதொழில்கள் செய்திருக்கிறேன். நான் பத்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். இருந்தாலும் வாசிப்பு பழக்கமும் எழுத்து ஆர்வமும் இருந்தது. இருபத்தியோரு வயதில் சினிமா ஆசை வந்து எழுத்தாளர், பாட லாசிரியர் ஆக வேண்டும் என நினைத்தேன்.

சினிமாத் தொழில் மட்டும்தான் பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக கஷ்டத்தைக் கொடுக்கும். சினிமாவுக்கு உண்மையாக இருப்பவர்களை மட்டும் கொண்டாடும். என் திறமையை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தேன். உதவி இயக்குநராக வேலை பார்க்க முடிவெடுத்து வாய்ப்பு தேடினேன். என் உடல் குறைபாட்டைக் காரணம் சொல்லி யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. பிறகு புத்தகங்கள் படித்தும், படங்கள் பார்த்தும் சினிமாவைக் கற்றுக் கொண்டேன். நண்பர்கள் எடுக்கும் குறும்படங்களில் தன்னார்வளராகப் போய் சினிமா எடுப்பதை கவனிப்பேன். நான் சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து இந்த நாள் வரைக்கும் என் குறை யைச் சொல்லி வாய்ப்புக்கேட்க நினைத்தில்லை. என் திறமையை நிராகரிக்க வேண்டாம் எனத்தான் சொல்கிறேன்.

இயல்பான மனிதர்களையே இந்த சினிமா படாதப்பாடுபடுத் தும். என்னைப்போல் குறைபாடு உள்ளவர்களை சொல்லவே வேண்டாம். பெரிய கொடுமை. குழந்தைகள் படிப்புச் செலவுக்கும். வாடகைக்கும் பணம் இல்லாமல் என் திரைக்கதைகளை விற்று இருக்கிறேன். இதுவரை மூன்று கதைகளை ஐந்தாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் விற்று இருக்கிறேன். நான் எழுதிய கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறேன். அவையெல்லாம் என் அலமாரியில் இன்னும் தொகுக்கப்படாமலே இருக்கிறது. இக்கட்டான சூழ் நிலைகளுக்கு மத்தியில் நெஞ்சோர நெருடல்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் வெளியிட்டேன். என் கற்பனையை விற்றுத்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.

மாற்றுத்திறனாளி என்கிற ஒரு காரணத்தால் நான் எதிர்கொண்ட அவமானங்களும், மறுக்கப்பட்ட வாய்ப்புகளும் அதிகம். இது போன்ற கடு சூழ்நிலைகளைக் கடந்து என் பத்து வருட சினிமா முயற்சியில் 'ஜமுனா' என்னும் திரைப்படத்தை இயக்கினேன். சில பிரச் சனைகள் காரணமாக படத் தின் ஒரு பகுதியை இன்னும் எடுக்காமல் இருக்கிறோம். 'ஜமுனா' இடைவெளி இல்லாத படமாக இருக்கும். எடுக்கப்படாமல் இருக்கும் காட்சிகளை விரைவில் எடுக்கப்போகிறோம். 'ஜமுனா' படம் தான் என் முதல் சினிமா அனுபவம். 

படத்தின் காட்சிகளை என் வசதிக்கு ஏற்ப சுவாரஸ்யம் குறையாமல் எழுதி இருந்தேன். நடிகர்களும் என்னை புரிந்துகொண்டு நடித்தார்கள். நான் வீல் சேரில் உட்கார்ந்து படம் இயக்கினாலும் இயக்குநர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் உணர்வைத் தந்தது. அதற்குக் காரணம் என் உதவியாளர்களும் நடிகர்களும்தான்.

எனக்கு எல்லா அனைத்துவகையான படம் இயக்க ஆசை. ஹாரர். த்ரில்லர் கதைகளை விரும்பி எழுதுவேன். வேறு வேறு வகைகளில் இதுவரை பதினாறு திரைக்கதைகளை எழுதி வைத்திருக் கிறேன். குறும்பட இயக்குநர்களுக்கு 'வார்த்தை தவறிவிட்டாய்', 'காட்சிப் பிழைகள்' என்னும் கதை, திரைக்கதை எழுதிக் கொடுத்திருக்கிறேன். அது படமாக்கப்பட்டிருக்கிறது.

'66சி' என்னும் கதையை கிரவுட் ஃபண்டிங் முறை யில் இயக்கமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சினிமாத்துறையில் இருக்கும் அனைத்துப் பணிகளைப் பற்றியும் எனக்கு தெளிவு இருக்கிறது. ஒரு நடிகரிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என எனக்குத் தெரியும். எல்லா வற்றையும் தாண்டி என் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. சினிமா இருப்பதால்தான் வாழ்கி றேன். சினிமாவில் இருக் கிறேன் என்கிற நம்பிக்கை தான் என்னை வாழவைக் கிறது" என்கிறார் இயக்கு நர் ஹரிகணேஷ்.