சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பற்றியும், அந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் பிரசார யுக்தியும் மிகவும் எதிர்க்கட்சியான தி.மு.க.விற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக கடைசிநாளுக்கு முந்தைய ஒருநாள் தமிழ்நாட்டில் வெளியாகும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தி.மு.க.விற்கு எதிராக கொடுக்கப்பட்ட 4 பக்க விளம்பரங்கள் மக்கள் மனதில் பதிவதாக இருந்தது. செய்திகளைப் போன்று அவ்வளவு நேர்த்தியாக விளம்பரத்தை தயாரித்தது மட்டுமின்றி, அனைத்து செய்தி நிறுவனங்கள் தி.மு.க.விற்கு எதிராக வெளியிட்ட செய்தியை போட்டு அசத்தினர்.
இதை சமயோஜித தாக்குதலை எதிர்பார்க்காத தி.மு.க வட்டாரங்கள் செய்வதறியாமல் தவித்தாலும், கடைசியில் விஜய், அஜித்தை தங்கள் விளம்பர யுக்திக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்து சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
விஜய்க்கு பிரஷர் கொடுக்கப்பட்டதா?
பிகில் படத்தின் ஓப்பனிங் பாடலில் வருவது போல செம வெறித்தனமாக சைக்கிள் ஓட்டி வந்து நடிகர் விஜய் வாக்களித்தது தான் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.
இதைவிட ஒருபடி மேலாக சொல்லவேண்டுமென்றால், மோடி எதிர்ப்பாளர்கள் அனைவரும் விஜய்யின் இந்த சைக்கிள் பயணத்தை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
பெட்ரோல் விலை உயர்வால் விஜய் சைக்கிளில் வந்து சென்றாக இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்ட பிரபலங்கள், தளபதி விஜய்யின் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களுக்கு கமெண்ட் கொடுத்து ஷேர் செய்து டிரெண்ட் செய்தனர்.
இவர்களின் டிரெண்டில் பலபேர் “தினசரி கூலி வேலைக்கு போறவன் கூட பெட்ரோல் வண்டில வந்து அமைதியா ஓட்டு போட்டுட்டு போறான்.. படத்துக்கு ரூ.100.கோடி சம்பளம் வாங்குறவன் என்னென்ன பண்றான் பாருங்க..” என்று கமெண்ட் அடித்தனர்.
இதுபோன்ற எதிர்மறை கமெண்ட் அடித்தவர்ளை தனது வலைபக்கத்தில் இருந்து பல பிரபலங்கள் நீக்கியதாக கூறப்படுகிறது.
இதில் இன்னுமொரு பாலோவர்,
“10 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விலை 55-60 ஆக இருந்தது
10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்பட டிக்கெட் ரூ .40 ஆனால் இன்று அது ரூ .160ரூபாய்..
அதில், விஜய் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் சம்பளம் ஒரு கோடி இப்போது பத்து கோடி”
என்று கமெண்ட் அடித்தவர் பிளாக் செய்யப்பட்டார்.
ஆனால் உண்மையில் திரைக்குப் பின்னால் நடைபெற்ற நிகழ்வே வேறு என்று அரசியல் ஆர்வலர்களும், சினிமா பிரபலங்களும் கூறிவருகின்றனர்.
எடப்பா வெச்சு செஞ்ச கட்சியின் தலைமையிலிருந்து விஜய்க்கும், அஜித்திற்கும் பிரஷர் வந்த காரணத்தால்தான் பெட்ரோல் விலை குறிக்க விஜய் சைக்கிளிலும், அஜித் கருப்பு சிவப்பு பட்டை வைத்த மாஸ்க்கையும் அணிந்து சூசகமாக ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்விற்காக சைக்கிளில் வந்தேன் என்ற என்ற நாடகத்தை தனது வீட்டிலிருந்து விஜய் துவக்கினாலும், இதுபோன்று செய்ய அஜீத் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான் மாஸ்க் மட்டும் அணிந்தாவது தங்களுக்கு ஆதரவு தருமாறு தலைமை கெஞ்ச, டென்ஷனான அஜித் வேண்டா வெறுப்பாக கருப்பு சிகப்பு மாஸ்க் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.
எப்போதும் அமைதியும், புன்முறுவலுமாக இருக்கும் அஜித்திற்கு கொடுக்கபட்ட பிரஷர் காரணமாகத்தான் தன்னை ஷெல்ப்பி எடுத்த ரசிகரின் செல்போனையே பிடுங்கி வைத்து, வாக்களித்த பின் கொடுத்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் வெச்சு செஞ்ச எடப்பாடியாரை விட்டுவிட்ட, சிவனேன்னு இருந்த நடிகர்களை டென்ஷன்படுத்திய எதிர்க்கட்சிகள் மீது சினிமா வட்டாரத்தில் சற்று கோபம் அதிகமாக காணப்படுகிறதாம்.