கொரானாவின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் இந்த வேளையில், திரைப்படத்துறை அதிகம் பாதிப்புக்குள்ளாகிவருகிறது.
பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரப்புதல் என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இதனால் புதிய படங்கள் ரிலீசாவதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
தெலுங்கில் தயாராகி உள்ள விராட பருவம் படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்து இருந்தனர். பெண் நக்சலைட்டின் காதல் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்து இருக்கிறார். ராணா நாயகனாக வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக சாய்பல்லவி நடித்துள்ள ‘விராட பருவம்’ படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் 30.4.2021-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியாக வரும் ராணாவால் சாய்பல்லவி சுட்டுக்கொல்லப்படுவது போல் கிளைமாக்ஸ் காட்சி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.
அதர்வாவுக்கு கொரானா உறுதி
இந்த நிலையில், மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போத நடிகர் அதர்வா கொரானா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதர்வா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
தற்போது கொரானாவால் திரையுலகத்தினர் மத்தியில் பீதி கிளம்பியிருப்பதாகவும், குறித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போகுமோ என்றும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.