சினிமாத்துறை என்பது மிகப்பெரிய முதலைகள் வாசம் செய்யும்போது இங்கு அறிமுக நடிகர், நடிகைகள், இயக்குநர், இசையமைப்பாளர்கள் எவ்வாறு சாதிக்க முடியும் என்பதை அற்புதமாக எடுத்துக் கூறியுள்ள படம் தட்சகா…
இந்தத் திரைப்படத்தை moviewud OTT தளத்தில் பார்க்கலாம்.
தினேஷ்குமார் என்பவர் தான் இந்த திரைப்படத்தினை தயாரித்து, நடித்தும் இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், தொகுப்பு என்று திரைப்படத்திற்கு தனது முழுப் பங்களிப்பையும் வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருட கடின உழைப்பால் இந்த திரைப்படத்தினை பூர்த்தி செய்துள்ளார்.
இது ஒரு பூஜ்ஜிய பட்ஜெட் படம். பல நெருக்கடிகள் காரணமாக கடந்த 2015 துவங்கி 2021 ஜனவரி மாதம் படம் முடித்து ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை முடிக்க 5 ஆண்டுகள் ஆனது.
இப்படத்தின் கதையம்சம்:
இந்தப்படத்தின் நாயகன், நாயகி, சினித்துறையைச் சேர்ந்த இயக்குநனர் இசையமைப்பாளர் போன்ற புதுமுகங்கள் திரைப்படத்துறையில் சாதிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் இவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
புதுமுக நடிகர்கள் என்றால் சினித்துறையில் அலட்சியமாகவும், புதுமுக டைரக்டர், இசையமைப்பாளர்களுக்கு போதிய சுதந்திரம் வழங்காமல் அடிமைத்தனமாக நடத்தப்படுவதும், பெண் நடிகைகள் என்றால் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கிற்கு ஆளாகின்றனர்.
இத் திரைப்படமானது எந்த வித முன்னணி நடிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களின் உதவி இன்றி முழுக்க முழுக்க சுயமுயற்சியில் எடுக்கப்பட்ட ஓர் திரைப்படம் ஆகும்.
சினிமாத் துறையில் தாம் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் முயற்சி செய்யும் நான்கு நண்பர்களைப் பற்றியதாகும். ஆரம்பத்தில் விதியின் விளையாட்டால் இந் நண்பர்களால் சாதிக்க முடியவில்லை. எனினும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாத இவர்கள் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓர் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இந்த பயணத்திலும் பல விதமான தடைகள் மற்றும் ஆச்சரியங்களை சந்திக்கின்றனர்.
இந்த நான்கு பேர் சினித்துறையில் இருந்து வெளியேறி, சொந்தமாக ஜீரோ பட்ஜெட் படம் தயாரிக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த முயற்சியில் இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதையம்சம் மிக எளிமையாக இருக்கவேண்டும் என்பதாலும், அனைவரும் ரசிக்கும் படி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கை முறையை வைத்து கதையை தயாரிக்க முடிவு செய்து, படத்தை துவக்குகின்றனர். இவர்களின் முயற்சி கைகூடுகிறதா? இல்லையா? என்பதை விவரிக்கிறது இந்தப் படம்.
அற்புதமான இசை, புதுமுகங்களாக இருந்தாலும், இப்படத்தில் மிக அருமையாக நடித்துள்ளனர். வாய்ப்பு தேடும் அனைவரும் அவசியம் இந்தப் படத்தை பார்க்கவேண்டும்.
சினித்துறையில் எவ்வளவு துன்பங்கள், துயரங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்தப் படம் ஒரு உதாரணம்.
லோபட்ஜெட், ஜூரோ பட்ஜெட் படம் தயாரிப்பதை விட அதை வெளியே கொண்டுவருவது மிகுந்த சிக்கல்கள் உள்ளது. அந்த சிக்கலை இப்படக்குழுவினர் சந்திக்க சுமார் 5 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. ஆனாலும் வெற்றி பெற்று moviswud OTT PLATFORM. ல் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளனர். இக்குழுவினருக்கு திரைமலர்.காம் இணையதளம் சார்பில் பாராட்டுக்கள்.
இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான தினேஷ்குமார் கூறும்போது…
“முற்றிலும் பட்ஜெட் குறைவான திரைப்படம், துரதிர்ஷ்டவசமாக இது உண்மையான கதையிலிருந்து இதைத் திருப்புகிறது. நான் இந்த திரைப்படத்தை எடுத்தது பணத்திற்காக அல்ல; இதன் மூலம் எனக்கு ஒரு பெயர் கிடைக்க வேண்டும். சினிமா மீது அவ்வளவு ஆர்வம் கொண்டவன்.
திரைப்படம் ஒரு திகில் திரில்லரை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் புதிய முகங்கள் காரணமாக எனது படம் நிராகரிக்கப்பட்டது. பெரிய நட்சத்திரங்கள் மட்டுமே இங்கு வாழ முடியும்.”
என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் எவ் விதமான தடைகளை சந்தித்தார்கள், இத் தடைகளை வெற்றி கொண்டார்களா இல்லையா? தமது இலட்சியத்தை இறுதியில் அடைந்தார்களா? என்பதை திரைப்படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
உண்மையில் இத் திரைப்படம் ஓர் சுவாரசியமான திரைப்படம் ஆகும். குறிப்பாக climax கட்டத்திலுள்ள twist வேற லெவல். மேலும் புது முக நடிகர்கள் என்றாலும் அவர்கள் ஓர் பாராட்டத்தக்க நடிப்பினை வழங்கியுள்ளனர். பின்னணி இசையும் ரசிக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.
ஓர் குறைந்த செலவில் ஓர் தரமான திரைப்படத்தினை இவர்கள் வழங்கியுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு உங்கள் ஆதரவை நிச்சயம் வழங்குங்கள். இத் திரைப்படமானது கொரோனா நிலவரம் காரணமாக moviewud OTT தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த தளத்திற்கு சென்று தட்சகா படத்தை அவசியம் பாருங்கள்.
உண்மையில் இப்படம் மிக அற்புதமான படைப்பாக இருந்தாலும் இப்படத்தைப் பற்றிய போதிய விளம்பரம், மார்க்கெட்டிங்க இல்லாததால் இப்படம் வெளியே தெரியாமல் உள்ளது.
இவரின் கடின உழைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்க மறந்து விடாதீர்கள். இந்த தரமான படைப்பை மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.