நிறம்
அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக இருந்தவர் அர்ஜுன். தற்போது இவர் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகர் ஆன தம்பி ராமையாவின் மகன் உமாபதியை அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்யப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது.
அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் இவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தற்போதைய தகவல் வெளியாகி உள்ளது.