logo
home சினிமா மே 03, 2022
திரைப்படமாகிறது தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு!?
article image

நிறம்

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, நடப்பு சமுதாய சீர்கேட்டினையும், அவலங்களையும் படமாக எடுத்தும், நடித்தும் வருகிறார். சமீபகாலமாக நிறைய படங்களில் ஹீரோவாக, குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் அசத்தி வருகிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி தமிழக முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.

இவரும், மற்றொரு இயக்குனர் போஸ் வெங்கட்டும் இணைந்து இத்திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி செய்து வைத்துள்ளதாகவும்,

விரைவில் உதயநிதியை சந்தித்து இதுகுறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் ஒரு பேட்டியில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கதை திரைப்படமாக திரைக்கு வந்தால், திராவிட கழக விசுவாசிகள் மற்றும் திராவிட ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று கோலிவுட்டில் பரவலாக பேசுகின்றனர்.