logo
home சினிமா ஏப்ரல் 08, 2021
விஜய் ஓட்டிவந்த சைக்கிளின் மர்மமும், வீட்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட்ட ஷூட்டிங்கும்.
article image

நிறம்

தேர்தல் சமயத்தில் நடிகர் விஜய்  ஓட்டிவந்த சைக்கிள் புத்தம் புது சைக்கிளாகவும், இந்த சைக்கிளை வாக்களித்த இருதினங்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்திரங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் வாக்குச்சாவடிக்கு இந்த சைக்கிளில்தான் போகவேண்டும் என்றும், அவர் செல்வதை ஷார்ட் பிலிம் போன்று எடுக்கப்படவேண்டும் என்றும் ஒரு டீம் விஜயை சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

எதுக்காக சைக்கிளில் போகிறோம் என்பதே விஜய்க்கு தெரியாத அளவிற்கு மிக நேர்த்தியாக ஷூட்டிங்க எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளில் வந்ததாகவும், அவர் சைக்கிளில் வந்ததற்கு முக்கிய காரணம், வாக்குச்சாவடி அருகில் இருப்பதுதான் எனவும், கார் ஓட்டி வந்து அங்கு நிறுத்த முடியாது என்பதன் காரணமாகவும், அவர் சைக்கிளில் வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் அரசியல் சூழ்ச்சி ஏதும் அறியாத விஜய், வழக்கம்போல ஹாயாக சைக்கிளில் சென்று வாக்கு அளித்துவிட்டு வீடு திரும்பிவந்தபோதுதான், தான் அரசியலுக்கு பகடைக்காயாக்கப்பட்ட விஷயமே அவருக்கு தெரிய வந்ததாம்.

வாக்களித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கு முன்பே... பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக சைக்கிளிலேயே வந்து வாக்களித்தார் விஜய் என்ற செய்தி... சேனல்களில் வெளியாவதைகண்டு அதிர்ச்சியடைந்தாராம் விஜய்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் விஜய் காணப்பட்டதாக கூறப்படுகிறது.