கொரானா பீதியின் காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் இணையதளத்தில் பல படங்கள் வெளியிட்ட சமயத்தில் கூட விஜய் தனது மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டு வசூலில் சாதனை படைத்தார்.
இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்குக் காரணம் தங்களுடைய படங்கள் வசூல் செய்யுமா என்ற சந்தேகம் தான்.
ஆனால் விஜய் தியேட்டரில் ரிலீஸ் செய்ததிலிருந்து அவர்களின் மனப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி தரமான சம்பவம் செய்த படமாக வெளிமாநில நடிகர்களால் பாராட்டப்படும் திரைப்படம்தான் மாஸ்டர்.
மாஸ்டர் படம் ஹிட்டானதை விட வசூலை வாரி குவித்தது தான் பல முன்னணி நடிகர்களும் ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த சாதனை காரணமாக மாஸ்டர் படம் இந்தியா முழுவதும் ரிலீஸாகியிருந்தாலும் மற்ற மொழிகளில் மாஸ்டர் படத்தை ரீமேக் செய்வதில் பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பல மொழிகளில் தங்கள் மாநிலம் சார்ந்த பிரச்சனையை இணைத்து ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் பல தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளது.
நடிகர் விஜய் தைரியமாக தன்னுடைய படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்து சாதனை படைத்துள்ளார், இவ்வளவு கூட்டம் வரும் என விஜய்யே எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்தளவுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை ஈட்டி கொடுத்துள்ளது. இதற்கு கதை அம்சமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் அசாத்திய தைரியத்தை பார்த்து பல முன்னணி நடிகர்களும் ஓ.டி.டி. தளத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவை மாற்றி, தியேட்டரில் படங்களை வெளியிட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அவருடைய சினிமா கேரியரில் முதல் முறையாக அசாத்திய சாதனை படைத்துள்ளது.
இந்தியை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆரம்பத்திலிருந்து சல்மான் கான் முயற்சி செய்துள்ளார், தமிழ் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதில் வல்லவராக இருக்கும் பிரபுதேவாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது.