logo
home சின்னத்திரை ஏப்ரல் 09, 2021
தமிழக ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு சித்தியாக வலம் வருவாரா சுகன்யா?
article image

நிறம்

சித்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான சித்தி கேரக்டர் இல்லாமல் நாடகம் தொடர்வதாலும், நடிகை ராதிகா மீண்டும் நடிக்க விரும்பாததாலும், தற்போது அந்த கேரக்டரில் நடிக்க திரைப்பட நடிகை சுகன்யாவை தேர்வு செய்யும் முடிவில் உள்ளாராம் ராதிகா.

சுகன்யா பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராகவும், தற்போது பட வாய்ப்பு இன்றி இருப்பதாலும், சின்னத்திரையில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்ற கோணத்தில் அவர் தேர்வாகியுள்ளார் என்று கூறப்பட்டாலும், ராதிகாவின்  சித்தி கேரக்டரில் சென்டிமெண்ட்டாக நடிக்கவும், சித்தி கேரக்டருக்கு சுகன்யா ஒத்துப்போவதால் அவரை வைத்தே தொடரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ராதிகா எந்த இடத்திற்கு சென்றாலும், அவரை சித்தி என்றே ரசிகர்கள் அழைத்தவன்னம் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் ராதிகா நடிக்காமல் சுகன்யா நடித்தால், சுகன்யாவையும் சித்தி என்றே அழைக்கவேண்டுமே என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

எப்படியோ தமிழகத்திற்கு விரைவில் இன்னொரு சித்தி கிடைக்கப்போகிறார்.