logo
home சின்னத்திரை ஏப்ரல் 09, 2021
கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் அக்காவாகிய நடிகை: நெட்டீசன்கள் தாக்குதலால் நேகா மேனன் வருத்தம்
article image

நிறம்

குழந்தைப் படுவத்திலிருந்தே நடித்துவருபவர் நேகா மேனன், இவர் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் அதிகம் அறியப்பட்டவர்.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் ‘சித்தி‘, ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். 

சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்யலட்சுமி’ சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

19 வயதாகும் நடிகை நேகா, சமூக வலைதள பக்கத்தில், தன் குடும்பத்தில் ஒரு குட் நியூஸை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது அதனை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், அவருக்கு திருமணமாகப் போவதாக நினைத்து வாழ்த்துக்கள் கமெண்ட்களை அள்ளி வீசியிருந்தனர்.

இந்நிலையில் அந்த குட் நியூஸ் என்னவென்று நேகா சமூக வலைதளத்தில் மீண்டும் தெரிவித்துள்ளார். 

“என் அம்மா கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனது தாய்க்கும், தங்கைக்கும் உங்களின் ஆசியை வழங்குங்கள். தற்போதைக்கு இவர்கள் தான் என்னுடைய உலகம்” என்று கமெண்ட் செய்திருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நேகா மேனனை சமூக வலைதளத்தில் பின்னி பெடலெடுத்துவிட்டனர். “திருமணம் செய்யவேண்டிய வயதில் அக்காவானது சந்தோஷமா?” என்று நெட்டீசன்கள் கேள்விகணைகளால் வறுத்தெடுப்பதை சகிக்கமுடியாத மேகா மேனன்...

“மோசமான கமெண்டுகளை எல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன். அவ்வாறு செய்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தற்போது அக்கா என்பதை விட தாயாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.