logo
home சின்னத்திரை ஏப்ரல் 09, 2021
கணவனுக்கு இன்னொரு பெயர் சார்? புதிய கலாச்சாரத்தை புகுத்தும் நாடகங்கள்
article image

நிறம்

கட்டிய கணவனை மாமா, ‘வாங்க... போங்க’ என்று அழைத்த காலம் மலையேறி பெயரை வைத்து அழைத்த காலமும் மாறி தற்போது சார் என்று அழைக்கும் புதிய கலாச்சாரத்தை சின்னத்திரை அறிமுகம் செய்து வருகிறது. 

ரோஜா சீரியலில் துவக்கப்பட்டு, சித்தி சீரியலில் பிள்ளையார் சுழி போட்ட இந்த ‘சார்’ என்ற வார்த்தை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுவதால், இனி வரும்காலங்களில் வரவிருக்கும் சீரியல்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு கேரக்டரில் ‘சார்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

ரோஜா சீரியலில் வசதி வாய்ப்பற்ற ரோஜாவும், சித்தி சீரியலில் வெண்பா கேரக்டரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக காட்டப்படுகிறது.

குறிப்பாக  இந்த ‘சார்’ கலாச்சாரம் வசதியில் குறைவாக உள்ள ஹீரோயின் கேரக்டர்களே அழைப்பதாகவுள்ளதால்  இனிவரும் நாடகங்களில் ஹீரோயின்கள் வசதியற்ற கேரக்டரிலேயே கதை அமைக்க வேண்டிய சூழலில் கதாசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

‘சார்’ என்ற வார்த்தையை நாடகங்கள் குத்தகைக்கு எடுக்கும் இந்த நேரத்தில் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ‘சார்’ என்று அழைத்தாலே அவர்கள் கணவன் மனைவியா இருப்பாங்களோ என்று தவறாக என்னத்தோன்றும்.

இனி அலுவலகங்களில் ‘சார்’ என்ற வார்த்தைக்கு பதில் வேறு ஒரு வார்த்தையை கையாள்வதுதான் சூழ்நிலைக்கு உகந்ததாகும். வேணும்னா ‘சாரே...‘ என்று வார்த்தையை பாக்கியராஜிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம்.