விஜய் டிவியில் தற்போது மிக டிரெண்ட்டாக ஓடிவரும் நிகழ்சிகளில் முதல் இடத்தில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்து செய்யும் அலப்பறையால், விஜய் டிவி அரங்கமே அதிர்ந்து வருகிறது.
இதுவரை செக்ஸ் குயினாக வலம் வந்த ஷகிலா, இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய ஜோக்கராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
ஷகிலாவை செக்ஸ் குயினாக மக்கள் மனதில் பதிந்த பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது.
சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன.
தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி நடிகை சகிலா பெண் ஒருவருடன் புகைப்படங்கள் வெளியிடுகிறார்.
ரசிகர்கள் சிலர் இவர் யாரென்று கேட்டதால், ஷகிலா அதற்க்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது:
"இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஷகிலா குறிப்பிட்டும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகிலா பற்றி மிளா கூறுகையில்,
“திருநங்கையாக மாறியதால் பெற்ற தாயே வீட்டை விட்டு துரத்திய போது, ஷகிலா மம்மிதான் எனக்கு ஆதரவு தந்து என்னை அரவணைத்து, பாதுகாக்கின்றார். ஷகிலா மம்மி மட்டும் இல்லையென்றால் என்நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கும்” என்று மனம் திறந்து கூறியுள்ளார்.
தமிழகத்தை மட்டுமின்றி கேரளாவையும் தனது உடல் அழகால் கட்டிப்போட்ட ஒரு நடிகையின் வாழ்க்கையில் நகைச்சுவையும், அன்பும் மறைந்திருப்பது இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் வெளிவந்துள்ளது.