logo
home சினிமா ஏப்ரல் 18, 2021
பெரியார் கொள்கை, ஆன்மிக பயணம், சமூக சிந்தனை, கடைசியில் மரணம்: விவேக் கடந்து சென்ற வாழ்க்கை
article image

நிறம்

விவேக் 1961 ஆண்டு நவம்பர் மாதம் 19 தேதி மதுரையில் பிறந்து,  தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்தார். 

ஆரம்பத்தில் மேலோட்டமான காமெடி காட்சிகளில் வலம் வந்தவர், தனது நடிப்பில் சிறிது மாற்றத்தை செய்து சமூக சிந்தனைகளையும், பெரியாரிஸ்ட் கொள்கையையும் சிறிது இணைத்து நகைச்சுவை செய்துவந்தார். நடிகர் எம்.ஆர்.ராதாவைப் போன்று காலப்போக்கில் பெரியார் கொள்கையை துறந்து ஆன்மிக ஈடுபாடு கொண்டு ஆன்மிகவழியில் செல்லத்துவங்கினார்.

சமூக சிந்தனைகள், நாட்டுப்பணி என்று தன்னை அர்ப்பணித்து, சமூக விழிப்புணர்வு பிரசாரத்திலும், இயற்கை வாழ்வியல் முறைக்கு முக்கியத்துவம் தரும்விதத்தில், இயற்கையை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.

‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘டும் டும் டும்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்து அதிகம் பேசப்பட்ட படங்களாகும்.

‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். 

பம்பாய் திரைப்படத்தில் சினிமாத்துறையினர் மீது ஏற்பட்ட மதக்கலவரத்தை பார்த்து மிகுந்த வேதனையடைந்தார், பல படங்களில் இந்துமதச் சடங்குகளை கேலியும் கிண்டலும் செய்தும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்ததை எண்ணி, இந்துமதக் கருத்துக்களை கேலியும் கிண்டலும் செய்வதை குறைத்துக்கொண்டவர்.

பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளில் கலந்து கொண்டு, கோவில் குளம் என்று தனது பார்வையை மாற்றிக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ அவர்கள். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார். 

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சியவர்.

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக்கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் இதற்கு சான்றுகளாகும். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக் அவர்கள், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

இவரின் நடிப்பிற்கு இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.

‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.

சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது. என்று பல்வேறு விருதுகளைப் பெற்று ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்தார்.

நான்கு பெண் குழந்தைகள்

விவேக்கின் மனைவி அருட்செல்வி. முதலில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். மகள்களில் மூத்தவர் அமிர்த்தா நந்தினி, இளைய மகள் தேஜஸ்வனி. மூன்றாவதாகப் பிறந்தவர் மகன் பிரசன்ன குமார்.

பிரசன்ன குமார் இசை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் பெற்றவர். தனது 13ஆவது வயதில், 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது, 2015ஆம் ஆண்டு மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

தனது ஒரே மகனை இழந்தது விவேக்கை நீங்கா துயரில் ஆழ்த்தியது. அவரது மகன் நினைவாக குழந்தைகள் ட்ரஸ்ட் ஒன்றையும் நடத்தி வந்தார் விவேக். அதோடு மீண்டும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதால், ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அவரது மனைவி கருவுற்ற நிலையில், மீண்டும் தங்களது மகனே வந்து பிறக்க போகிறான் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. 

என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.!!

நமது திரைமலர்.காம் இணையதள துவக்கத்திற்கு வழிகாட்டிகளில் நடிகர் விவேக் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார்.

மறைந்த முன்னாள் பிரதமரும், விஞ்ஞானியும், சமூக நல முன்னேற்றத்திற்கு புதிய வழிகாட்டுதல்களையும் வழங்கியவருமான அப்துல்கலாமின் முக்கிய சீடர்களில் விவேக் மிக முக்கியமானவராக திகழ்ந்தார்.

17.4.2021 அதிகாலை 4.30 மணிக்கு இறந்தாலும், மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய நாள்கூட கொரானா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளவேண்டும் என்று சமக பிரச்சாரம் செய்தவர்.

இதுபோன்ற சமூக அக்கறையுள்ள ஒரு கலைஞன் இனி உருவானால் கண்டிப்பாக, அக்கலைஞனுக்கு ரோல்மாடலாக நடிகர் விவேக்தான் இருப்பார்.