logo
home Lifestyle ஏப்ரல் 09, 2021
ஆண்களை கொடுமைப்படுத்தும் பெண்கள் பாக்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்ட சர்வே...
article image

நிறம்

ஆண்களை எப்படியெல்லாம் பெண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா... இப்படித்தான் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது பாக்ஸ் நியூஸ் நிறுவனம். இந்தப் பட்டியலில் பத்து விதமான கொடுமைகளை ஆண்களுக்கு பெண்கள் இழைப்பதாக அது கூறியுள்ளது. ஆண்களின் உணர்வுகள் மற்றும் ஈகோவுடன் விளையாடிப் பார்ப்பதை ரசிக்கிறார்களாம் பெண்கள்...

போன் பண்ணா எடுப்பதே இல்லை

பெண்களுக்கு நல்ல மூடு இருந்தால் தங்களுக்குப் பிடித்தமான ஆணுக்கு, அவர்களே போன் செய்து கொஞ்சுவார்களாம், குலாவுவார்களாம்.. ஆனால் பிடிக்காமல் போய் விட்டால், போனே செய்ய மாட்டார்களாம். போன் செய்தாலும் கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களாம். இல்லாவிட்டால் செல் போன் எண்ணையே மாற்றி விட்டு அப்படியே மறந்து போய் விடுவார்களாகம். 

ப்ரீ' சர்வீஸுக்கு மட்டும் 

சில பெண்கள் தங்களது காதலர்களுடன் வெளியில் போகும் போது ஐந்து பைசா செலவழிக்க மாட்டார்களாம். மாறாக, காதலரையே முழுக்க செலவு செய்து மொட்டை போட்டு திருப்பதி ராஜாவாக்கி அனுப்புவார்களாம். 

டைம் பாஸுக்கு 

இன்னும் சில பெண்கள், டைம் பாஸுக்காகவே ஆண்களிடம் பழகுகிறார்களாம். அதாவது தனக்குப் பிடித்த இன்னொருவர் கிடைக்கும் வரை இவரை வைத்திருப்பது. கிடைத்தவுடன் பழைய ஆளை கைவிடுவது என்று பொழுதுபோக்கு போல செய்வார்களாம். இப்படிப்பட்ட பெண்கள் எப்போதும் தனிமையாக இருக்க விரும்ப மாட்டார்களாம். எனவே தனக்குத் தோதான இன்னொருவர் கிடைக்கும் வரை பழையவரிடம் பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்வார்களாம். 

உணர்வுகளுடன் விளையாடுவது 

பல பெண்களுக்கு ஆண்களைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கிறதாம். ஆண்கள் தங்கள் மீது காட்டும் அன்பை அவர்கள் 'மிஸ் யூஸ்' செய்கிறார்கள் என்று பாக்ஸ் நியூஸ் சொல்கிறது. மேலும் தங்களுக்குத் தேவையானதை சாதித்துக் கொள்வதற்காக, ஆண்களின் பலவீனத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதாவது கண்ணீர் விடுவது, குழைந்து பேசுவது.. இப்படி. 

என்னா அடி...! 

இன்னும் சில பெண்கள் கோவை சரளா ரேஞ்சுக்கு இருப்பார்களாம். அதாவது வடிவேலு அடித்தால் அது நியூஸ் இல்லை, கோவை சரளா அடித்தால்தான் நியூஸ் என்பது போல. இப்படிப்பட்ட குணம் கொண்ட பெண்கள், அடிக்கடி காதலரை அடிப்பது, கோபத்தில் முறைப்பது போன்றவற்றை செய்வார்களாம். நாம் என்ன செய்தாலும் இவன் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையாம் அது.

எப்பவுமே 'இவன்' இப்படித்தான்... 

இன்னும் சில பெண்கள், தங்களது காதலரை மற்றவர்களுக்கு முன்பு மட்டம் தட்டிப் பேசுவது, கேலி செய்வது, கிண்டலடிப்பது என்று நடந்து கொள்கிறார்களாம். மேலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு 'லந்து' செய்வதும் உண்டாம். 

மனதில் உள்ளதை சொல்வதே கிடையாது 

பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளதாம். அதாவது தன்னை விரும்பும் நபரிடம் தனது மனதில் இருப்பதை அப்படியே சொல்வது கிடையாதாம். மேலும் ஏற்கனவே மனதில் ஒருவரை வைத்திருந்தாலும் கூட, அதை தனது காதலரிடம் சொல்வது கிடையாதாம். 

சோதனை மேல் சோதனை... 

இன்னும் சில பேர் இப்படிச் செய்கிறார்கள். அதாவது அந்த ஆண் ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பார். தனது நண்பர்களுடன் எங்காவது போயிருப்பார். அப்போது பார்த்து போன் வரும்.. உடனே கிளம்பி வா என்று காதலியிடமிருந்து. முடியாது என்று சொன்னால் அவ்வளவுதான் கொந்தளித்து போய் விடுவார்களாம். அதை விட முக்கியமாக, நாம் எங்காவது போகிறோம், யாரையாவது பார்க்கப் போகிறோம் என்று தெரிந்தால், வேண்டும் என்றே என்னுடன் வா என்று கூப்பிடுவார்களாம். மறுத்தால் சண்டைதான்...நீ என்னை உண்மையிலேயே லவ் பண்ணலை என்று 'பன்ச்'சுடன்... பாத்தியா எனக்கும் ஆள் இருக்கு... இப்படியும் சிலர் உள்ளனராம். அதாவது தங்களது காதலர்களை சீண்டுவதற்கும், டென்ஷன் கொடுப்பதற்கும், வேண்டும் என்றே மனதை நோகடிப்பதற்காகவும், பிற ஆண்களுடன் நெருங்கிப் பழகுவார்களாம், அவர்களுடன் தாங்கள் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வார்களாம்.