logo
home Lifestyle ஏப்ரல் 09, 2021
சிக்கனை அதிகமாக பெண்குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள், அதிகம் சாப்பிடாதீர்கள்
article image

நிறம்

சிக்கனை விரும்பாதவர்கள் உலகில் இல்லை எனலாம், உலக அளவில் உள்ள உணவுகளில் மிக ஏராளமானோர் அதிகமாக விரும்புவது சிக்கன். அதனைக்கொண்டு பல அற்புதமான ரெசிபிக்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி அதன் விலையும் மிகக் குறைவு. அதனால் விலை குறைவு என்பதால் பலரும் தினமும் அதனை சாப்பிட்டு வருகிறார்கள். அதில் அதிக புரோட்டின் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மிகவும் ஆபத்து. பொதுவாக நாம் எந்த உணவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எதையுமே அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆபத்து கட்டாயம் நேரிடும்.

அதன்படி சிக்கனை அதிகமாக, குறிப்பாக தினமும் சாப்பிட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம். மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் சிக்கனில்  கொழுப்பு மிக குறைவாக உள்ளது. இருந்தாலும் இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதல்ல. இதில் உள்ள புரோட்டின் உடலில் கொழுப்புகள் தேங்க ஆரம்பிக்கும்.

அதனால் உடல் எடை அதிகரித்து, ரத்த லிப்பிட்டுகளின் அளவை உயர்த்துகிறது. தினமும் ஒரு பெரிய துண்டு சிக்கனை சாப்பிட்டால், தினசரி எடுக்கவேண்டிய புரோட்டீனை விட மிகவும் அதிகமான அளவில் உடலுக்கு புரோட்டீன் கிடைக்கும். அதனால் உடல் கொழுப்பை அதிகரித்து இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டும் உடலில் கொழுப்புகள் அதிகரிக்காது. புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

அதிலும் குறிப்பாக இதய பிரச்சனை ஏற்பட்டு மரணத்தைக் கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிக்கனை அதிகமாக சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை இது அதிகம் தாக்கும். மேலும் சில தொற்று நோய்களும் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்து. எனவே சிக்கன் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.